உடைந்தது திமுக கூட்டணி.., தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து பதிவான வாக்குகள் கடந்த மே 4ஆம் திகதி மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில் எண்ணப்பட்டன.
இந்த சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆட்சியமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவையான நிலையில், தவெக-விற்கு இன்னும் 10 இடங்கள் குறைவாக உள்ளது.

இதனால் பெரும்பான்மையை பெற தவெக, பிற கட்சிகளின் ஆதரவை நாடி வருகிறது.
இந்நிலையில், தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இதன் மூலம் நீண்ட காலமாக திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், அந்த கூட்டணியில் இருந்து விலகுகிறது.
குறிப்பாக, சமீபத்திய தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
The President of Tamizhaga Vettri Kazhagam (TVK), Thiru C Vijay, has formally requested the Indian National Congress (INC) to extend its support for forming a government in Tamil Nadu. The people of Tamil Nadu, especially the youth, have delivered a very clear, strong and… pic.twitter.com/Aig79MoRoE
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) May 6, 2026
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |