இந்தியாவுடன் நாளை அரையிறுதிப்போட்டி: முக்கிய வீரருக்கு பதிலாக மாற்று வீரர்..அறிவித்த அவுஸ்திரேலியா
சாம்பியன்ஸ் டிராஃபி அரையிறுதிப் போட்டியில் மேத்யூ ஷார்ட்டிற்கு பதிலாக, கூப்பர் கோனொலி இடம்பெற்றுள்ளதாக அவுஸ்திரேலிய அணி அறிவித்துள்ளது.
மேத்யூ ஷார்ட் காயம்
துபாயில் நாளை இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபியின் முதல் அரையிறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
இப்போட்டியில் விளையாட உள்ள அவுஸ்திரேலிய அணியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியாவின் மேத்யூ ஷார்ட் (Matthew Short) ஃபீல்டிங்கின்போது காயமுற்றார்.
இதனால் அவருக்கு பதிலாக இளம் வீரர் ஜேக் பிரேஸர் மெக்கர்க் விளையாடுவார் என்று கூறப்பட்டது.
கோனொலி
இந்த நிலையில், மேத்யூ ஷார்ட்டிற்கு பதிலாக கூப்பர் கோனொலி (Cooper Connolly) அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அணி அறிவித்துள்ளது.
ஏற்கனவே பென்சில் ஆல்ரவுண்டர் வீரரான ஆரோன் ஹார்டி உள்ள நிலையில், இடக்கை சுழற்பந்து வீச்சாளரான கோனொலி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்பு அதிக உள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |