ஆர்க்டிக் பகுதியில் அடுத்தடுத்து மின்னல்.. குழம்பிய விஞ்ஞானிகள்
ஆர்க்டிக் பகுதியில் சைபீரியாவில் இருந்து வடக்கு அலாஸ்கா வரை கடந்த மூன்று நாட்களில் அடுத்தடுத்து மூன்று முறை மின்னல் தாக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சைபீரியா தொடங்கி வடக்கு அலாஸ்க்கா வரை பல ஆர்க்டிக் பகுதிகளில் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக மின்னல் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இங்கு இருக்கும் பனிப்பகுதிகள் உருகி தண்ணீர் வெளியே தெரிய தொடங்கி உள்ளது. இதனால் அங்கு லேசாக வெப்பநிலை உயர்ந்து, தண்ணீரின் ஆவியை மேலே அனுப்பி உள்ளது. இதெல்லாம் சேர்ந்து மொத்தமாக அங்கு மின்னல்களை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில்,
இதுபோன்ற ஒரு நிகழ்வை நாங்கள் பார்த்ததே இல்லை. இதற்கு முன் இப்படி நடந்ததே இல்லை. 10 வருடத்தில் ஒரு முறை மின்னல் அடிப்பதே அரிது. ஆனால் இப்போது அடிக்கடி இப்படி நடக்கிறது. அதிலும் கடந்த 3 நாளில் தினமும் மின்னல் தாக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Lightning has been observed over the Chukchi Sea as a front dives south across the region, this coupled with warmer air from Siberia is creating the right atmosphere where thunderstorms have developed, producing the lightning that is occurring. #akwx pic.twitter.com/juv8hxon7x
— NWS Fairbanks (@NWSFairbanks) July 13, 2021
காலநிலை மாற்றம் காரணமாக வெப்பநிலை உயர்ந்துவிட்டது. இதனால் பனி உருகிவிட்டது. இதனால் மின்னல் ஏற்படுகிறது. காலநிலை மாற்றத்தின் வார்னிங் சிக்னல் இது, என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.”
மேலும் கடந்த 2015ல் இருந்தே இது போன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. இப்போது மிக வேகமாக தினமும் மின்னல் ஏற்படும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது என்று கூறப்படுகின்றது.