ட்ரம்பால் அமெரிக்காவை புறக்கணித்த கனேடியர்களுக்கு கிடைத்த எதிர்பாராத அதிர்ச்சி
ட்ரம்ப் நிர்வாகத்தை கண்டித்து அமெரிக்காவைப் புறக்கணிக்கும் கனேடியர்கள் தங்கள் விடுமுறைக்காக அதிக பணம் செலவிடுகிறார்கள் என ஆய்வறிக்கை ஒன்றில் தெரிய வந்துள்ளது.
அதிக பணம் செலவிடும்
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கனேடிய மக்கள் மற்ற நாடுகளுக்கு பயணம் செய்வதால் அதிக பணம் செலவிடும் சூழல் உருவாகியுள்ளது. அர்ஜென்டினாவுகு கனேடியர்களின் பயணம் 148 சதவீதமும், ஜப்பானுக்கு 137 சதவீதமும், டென்மார்க்கிற்கு 114 சதவீதமும், குராக்கோவிற்கு 101 சதவீதமும் உயர்ந்துள்ளது.
மட்டுமின்றி, அருபாவுக்கான பயணம் 71 சதவீதமும், போர்ச்சுகலுக்கு 61 சதவீதமும், ஸ்பெயினுக்கு 35 சதவீதமும் அதிகரித்துள்ளது. கனடாவின் பொருளாதாரத்தின் மீதான ஜனாதிபதி ட்ரம்பின் தாக்குதல்களும், 51வது மாகாணமாக மாற்றுவதற்கான அச்சுறுத்தல்களும் கனேடிய மக்களை கோபப்படுத்தியுள்ளன, இதனால் அதிக எண்ணிக்கையில் அமெரிக்காவிற்கான பயணங்களை கனேடிய மக்கள் ரத்து செய்து வருகின்றனர்.
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர், தனது வருடாந்திர அமெரிக்க பயணத்தை ரத்து செய்யத் தூண்டியதாக ஆல்பர்ட்டாவில் வசிப்பவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
30 சதவீதத்திற்கும் மேல்
கடந்த ஆண்டு லாஸ் வேகாஸ் பயணப்பட்ட அவர் தற்போது, பணம் அதிகம் செலவாகும் என்றாலும் பால்கன் நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவுக்கு அதிகம் பயணப்படும் மக்களாக கனேடியர்கள் இருந்துள்ளனர்.
கடந்த ஆண்டு மட்டும் 20.5 பில்லியன் டொலர் செலவிட்டுள்ளனர். ஆனால் ட்ரம்ப் விவகாரத்தை அடுத்து, கனேடியர்களின் அமெரிக்க விமான பயணம் 13.5 சதவீதம் சரிவடைந்தது. கார்களில் செல்லும் கனேடியர்களின் எண்ணிக்கை 30 சதவீதத்திற்கும் மேல் சரிவடைந்தது.
அமெரிக்க இடங்களுக்கான விமானங்களைக் குறைத்தும், மெக்சிகன் மாற்றுப் பயணங்களுக்கு அடிக்கடி செல்வதை அதிகரிப்பதன் மூலமும் விமான நிறுவனங்கள் தங்கள் பாதையை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |