உலகத்தில் ஈக்கள் இல்லையென்றால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
உலகத்தில் ஈக்கள் இல்லாமல் இருந்தால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
உண்டாகும் தீமைகள்
உலகத்தில் உள்ள சில நாடுகளில் ஈக்கள் இல்லை. அங்குள்ள வெப்பநிலைகளை பொறுத்து ஈக்கள் அங்கு காணப்படுகின்றன.
பொதுவாகவே பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் இயற்கைக்கு நன்மை, தீமை இரண்டுமே ஏற்படுத்துகின்றன.
அதேபோல தான் ஈக்களும். இதனால் எண்ணற்ற தீமைகள் ஏற்பட்டாலும் சில நன்மைகளும் உள்ளன.
வீட்டு ஈ (housefly) என்றழைக்கப்படும் ஈக்கள் உள்பட உலகத்தில் பல ஆயிரக்கணக்கான ஈக்கள் வகை உள்ளன. காலரா, டைபாய்டு மற்றும் வயிற்றுப்போக்கு ஆகிய நோய்களை ஈக்கள் பரப்புகின்றன.
மனிதர்களுக்கு தீங்கு ஏற்படும் காரணத்தினால் ஈக்கள் இல்லாமல் இருப்பது ஒரு வகையில் நல்லது தான்.
ஆனால், மறுபுறத்தில் இறந்த விலங்குகளின் உடல்கள், தாவரங்கள் மற்றும் குப்பைகள் போன்றவற்றின் சிதைவுகளை ஈக்கள் ஏற்படுத்துகின்றன.
இப்போது ஈக்களே இல்லாவிட்டால் இவற்றின் சிதைவுகள் மெதுவாக நடைபெற்று துர்நாற்றம் வீசும்.
மேலும், ஹோவர்ஃப்ளைஸ் போன்ற ஈக்கள் தாவரங்களுக்கு மகரந்தச் சேர்க்கை செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
உலகத்தில் ஈக்கள் இல்லாமல் இருப்பது சுற்றுச்சூழல் அமைப்பின் சமநிலையைப் பாதித்து தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு தீமையை உண்டாக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |