கனடா மக்கள் ஆதரவு யாருக்கு? வாக்கெடுப்பில் முந்திய எதிர்க்கட்சி
கனடாவில், ஆளுங்கட்சிக்கு மக்களிடையே ஆதரவு குறைந்துவருவதாக ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
கனடா மக்கள் ஆதரவு யாருக்கு?
Abacus Data என்னும் அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வொன்றில், ஆளும் லிபரல் கட்சியைவிட, எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிக்கு மக்களிடையே ஆதரவு அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது.
பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சிக்கு 39 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 41 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
கனடா பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதைத் தொடர்ந்து பிரதமராக பதவியேற்ற மார்க் கார்னி, ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி நடைபெற்ற ஃபெடரல் தேர்தலிலும் வெற்றி பெற்றார்.
ஆனால், விலைவாசி, வீடுகள் பற்றாக்குறை, மருத்துவ வசதிகள் மற்றும் புலம்பெயர்தல் ஆகிய விடயங்கள் மீண்டும் தலைதூக்கத் துவங்கியுள்ளன.
ஆக, ஆளுங்கட்சிக்கு ஆதரவு குறைந்தாலும், பிரதமர் மார்க் கார்னிக்கு மக்களிடையே 48 சதவிகித ஆதரவு உள்ளது. எதிர்க்கட்சித் தலைவரான Pierre Poilievreக்கு 40 சதவிகித ஆதரவுதான் உள்ளது.
மார்க் கார்னியைப் பொருத்தவரை, அவர் அடுத்த தேர்தலை எதிர்கொள்ள இன்னும் மூன்றரை ஆண்டுகள் உள்ளன. அதற்குள் வாக்காளர்கள் சந்தித்துவரும் பிரச்சினைகளை அவர் தீர்க்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |