30 ஆண்டுகளில் மோசமான தேர்தல் முடிவுகளை சந்தித்துள்ள கன்சர்வேட்டிவ் கட்சி: பிரதமர் ரிஷியின் பதவிக்கு ஆபத்து
பிரித்தானியாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில், 30 ஆண்டுகளில், முதன்முறையாக மோசமான முடிவுகளை சந்தித்துள்ளது பிரதமர் ரிஷி சார்ந்த, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி.
ரிஷியின் பதவியைப் பறிக்கத் தயங்கும் கட்சியினர்
1995க்குப் பிறகு கன்சர்வேட்டி கட்சி இப்படி ஒரு தோல்வியை இப்போதுதான் சந்திக்கிறது.
தேர்தல் முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என ஏற்கனவே கருத்துக்கணிப்புகள் கூறிவந்த நிலையிலும், ரிஷியை பதவிலியிருந்து அகற்ற அக்கட்சியினர் மிகவும் தயக்கம் காட்டிவந்தனர், வருகின்றனர்.
என்றாலும், இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ரிஷியின் பதவிக்கு உலை வைக்கின்றனவோ இல்லையோ, பொதுத்தேர்தல் எப்போது என்பதை முடிவு செய்ய அவை காரணமாக அமைய இருக்கின்றன என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.
தேர்தல் நடத்தக்கோரும் வெற்றி பெற்ற கட்சி
ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியினரின் இருக்கைகளில், பலவற்றைக் கைப்பற்றி, சமீபத்திய நிலவரப்படி 350 இருக்கைகளைக் கைப்பற்றியுள்ளது லேபர் கட்சி.
அக்கட்சியின் தலைவரான Sir Keir Starmer, இந்த வெற்றி, எங்களுக்கு மாற்றம் தேவை என மக்கள் பிரதமர் ரிஷிக்கு கூறியுள்ள செய்தியாகும் என்கிறார்.
வழி விடுங்கள், தேர்தல் நடத்துவோம், நம் நாடு முன்னேற அனுமதிப்போம் என நாட்டு மக்கள் பிரதமர் ரிஷிக்கு இந்த தேர்தலின் மூலம் நேரடிச் செய்தி ஒன்றைக் கூறியுள்ளார்கள் என்கிறார் லேபர் கட்சியின் தலைவரான Sir Keir Starmer.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |