Hartlepool இடைத்தேர்தலில் தொழிலாளர் கட்சியை வீழ்த்தி வரலாறு படைத்தது போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி!
பிரித்தானியாவின் Hartlepool தொகுதி இடைத்தேர்தலில் தொழிலாளர் கட்சியை வீழ்த்தி முதன் முறையாக அத்தொகுதியை கைப்பற்றி கன்சர்வேடிவ் கட்சி வரலாறு படைத்துள்ளது.
Hartlepool தொகுதியின் தொழிலாளர் கட்சி எம்.பி மைக் ஹில் கடந்த மார்ச் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள உள்ளதால் மைக் ஹில் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மே 6ம் திகதி பிரித்தானியா கவுன்சில்களுக்கான தேர்தல் நடந்தது, அத்துடன் Hartlepool தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடந்தது.
Hartlepool இடைத்தேர்தலில் மொத்தம் 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இன்று Hartlepool தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், கன்வர்வேடிவ் வேட்பாளர் Mortimer 6,940 வாக்குகள் வித்தியாசத்தில் தொழிலாளர் கட்சி வேட்பாளர் Paul Williams-ஐ வீழத்தி வெற்றிப்பெற்றார்.
கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் Jill Mortimer 15,529 (52%) வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் கட்சி வேட்பாளர் Paul Williams 8,589 (29%) வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
1974-ல் உருவாக்கப்பட்டதிலிருந்து தொழிலாளர் கட்சியின் கோட்டையாக இருந்த Hartlepool தொகுதியில் முதன் முறையாக கன்சர்வேடிவ் கட்சி வெற்றிப்பெற்று வரலாறு படைத்துள்ளது.
விரைவில் எம்.பி. ஆக இருக்கும் Mortime தனது வெற்றியை உண்மையிலேயே வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என்று பாராட்டினார், மேலும் தொகுதிக்கான வேலை வாய்ப்புகள் மற்றும் முதலீட்டை கொண்டுவருவதற்காக அயராது உழைப்பேன் என்று உறுதியளிக்கிறார்.