கோவிடால் மக்கள் உயிரிழந்துகொண்டிருக்கும்போது ஆடிப்பாடிக்கொண்டிருந்த கன்சர்வேட்டிவ் கட்சியினர்: மக்கள் கொந்தளிப்பு
லண்டனில் கோவிட் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தபோதும், மக்களுக்காக உழைத்து உயிரை இழந்தது ஒரு கூட்டம்.
அதே நேரத்தில், போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியினர் பார்ட்டி நடத்தி ஆட்டமும், பாட்டமுமாக விதி மீறல்களில் ஈடுபட்ட விடயம் பிரித்தானியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
வெளியாகியுள்ள வீடியோ
லண்டனில் கோவிட் இரண்டாம் நிலை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நேரத்தில், 2020ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 14ஆம் திகதி எடுக்கப்பட்ட ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
அந்த வீடியோவில், எந்த வித விதிகளையும் பின்பற்றாமல் கன்சர்வேட்டிவ் கட்சியினர் ஆடிப்பாடிக்கொண்டிருப்பதைக் காணலாம். அந்த நேரத்தில் ஓரிடத்தில் ஆறு பேர் மட்டுமே கூட அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த பார்ட்டியில் 24 பேர் கலந்துகொண்டிருந்தார்கள்.
தாங்கள் வீடியோ எடுக்கப்படுவதை அறிந்தும் எந்த கவலையும் இல்லாமல் நடனமாடிக்கொண்டிருந்தது ஒரு ஜோடி. அவர்களுக்கு அருகிலேயே சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் என்றொரு அறிவிப்புப் பலகை தொங்கிக்கொண்டிருந்தது.
உழைத்து உயிரை இழந்த ஒரு கூட்டம்
அதே நேரத்தில், விதிகளையும் பின்பற்றியபடி சிலர் கடமையாற்றிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் லண்டன் பேருந்து சாரதியான Ealingஐச் சேர்ந்த ரஞ்சித் (Ranjith Chandrapala, 64)ம் ஒருவர்.
கோவிட் தொற்றுக்காளாகி, 2020ஆம் ஆண்டு மே மாதம் தனது 64ஆவது வயதில் உயிரிழந்துவிட்டார் ரஞ்சித்.
தன் தந்தை கோவிட் நேரத்திலும் உழைத்து உயிர் விட்ட நேரத்தில், கன்சர்வேட்டிவ் கட்சியினர் ஆடிப்பாடிக்கொண்டிருந்ததைக் காட்டும் வீடியோ, தன் வயிற்றில் அடித்ததுபோல் வலியைக் கொடுத்தது என்கிறார் ரஞ்சித்தின் மகளான லெஷீ (Leshie Chandrapala).
நேற்று முன்தினம் உகலமே தந்தையர் தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்க, லெஷீயோ தன் தந்தையை நினைத்து வாடிக்கொண்டிருக்கிறார்.
அந்த வீடியோ நான் அனுபவித்த வேதனையை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருகிறது என்று கூறும் லெஷீ, விதிகளைப் பின்பற்றி உழைத்து உயிரிழந்தவர்களைக் கேலி செய்வது போல் அந்த வீடியோ இருப்பதாகத் தெரிவிக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |