அமெரிக்கா சென்ற பிரித்தானிய மகாராணியாரைக் கொல்ல நடந்த சதி: FBI வெளியிட்டுள்ள தகவல்
மறைந்த பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் அமெரிக்கப் பயணத்தின்போது, அவரைக் கொலை செய்ய நடந்த சதித்திட்டம் குறித்து, திங்கட்கிழமையன்று வெளியிடப்பட்ட FBI வெளியிட்டுள்ள ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாராணியாரை கொலை செய்ய திட்டம்
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் அமைந்திருந்த ஐரிஷ் மதுபான விடுதி ஒன்றிற்கு அமெரிக்கப் பொலிசார் ஒருவர் அடிக்கடி செல்வதுண்டாம்.
அங்கு மது அருந்த வரும் ஒருவர் இந்த பொலிசாருக்கு அறிமுகமாகியுள்ளார். ஒரு நாள், அந்த பொலிசாரை தொலைபேசியில் தொடர்புகொண்ட அந்த நபர், தான் பிரித்தானிய மகாராணியாரை கொல்ல திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
GETTY IMAGES
வட அயர்லாந்தில் ஒரு காலகட்டத்தில் நடத்த மோதல்களின்போது, இந்த நபருடைய மகள் ரப்பர் குண்டு ஒன்றினால் கொல்லப்பட்டிருக்கிறாள்.
அதற்கு பழிக்குப் பழி வாங்கவே, அமெரிக்கா செல்லும் பிரித்தானிய மகாராணியாரை, தான் அமெரிக்காவில் வைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவிக்க, உடனே, இந்த விடயத்தைக் கூறி பெடரல் ஏஜண்டுகளை எச்சரித்துள்ளார் அந்த பொலிசார்.
அமெரிக்கப் பொலிசார் எடுத்த நடவடிக்கை
மகாராணியாரைக் கொல்ல ஒருவர் திட்டம் தீட்டியுள்ளது குறித்த தகவல், அமெரிக்கப் பொலிசாருக்கு 1983ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 4ஆம் திகதி கிடைத்துள்ளது.
பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தும், அவரது கணவரான இளவரசர் பிலிப்பும் மார்ச் மாதத்தில் அமெரிக்கா செல்ல திட்டம் வைத்துள்ளார்கள்.
GETTY IMAGES
சான் பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள Golden Gate Bridge என்னும் பாலத்தின் கீழ் படகில் மகாராணியார் பயணிக்கும்போது, பாலத்திலிருந்து எதையாவது வீசி அவரைக் கொல்வது, அல்லது Yosemite National Park என்னுமிடத்துக்கு மகாராணியார் வரும்போது, அங்கு வைத்து அவரைக் கொல்வது அந்த நபருடைய திட்டம்.
ஆகவே, மகாராணியாரின் அமெரிக்கப் பயணத்தின்போது, அவர் படகில் பயணிக்கும் நேரத்தில், Golden Gate Bridge மீது மக்கள் நடக்கத் தடை விதிக்கப்பட்டது. இந்த விடயம், சமீபத்தில் வெளியிடப்பட்ட FBI ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், Yosemite National Parkஇல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதோ, மகாராணியாரைக் கொல்ல திட்டமிட்ட நபரின் கைது குறித்தோ, FBI வெளியிட்டுள்ள ஆவணங்களில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.