மேக்ரான் மனைவி திருநங்கையா? அமெரிக்கா பரப்பும் வதந்திகளால் சர்ச்சை
தன்னை விட 24 வயது மூத்தவரான தனது ஆசிரியையை காதலித்துத் திருமணம் செய்தார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.
தன்னை விட 24 வயது இளைய மாணவனுக்காக தனது கணவரை விவாகரத்து செய்தார் பிரிஜிட் மேக்ரான்.
ஆனால், காவியமாக எழுதப்படவேண்டிய அந்த காதல் கதை இப்போதும் இருவருக்கும் வேதனையை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது!
மேக்ரான் மனைவி திருநங்கையா?
மேக்ரானின் மனைவியான பிரிஜிட் ஆணாகப் பிறந்தவர். அவர் ஒரு திருநங்கை என்பதை மறைத்து வாழ்ந்துவருகிறார் என ஒரு வதந்தை பரவி அதற்காக மேக்ரான் தரப்பு வழக்குத் தொடர, பிரிஜிட்டுக்கு இழப்பீடும் வழங்கப்பட்டது.
இந்த வதந்தியின் பின்னணியிலிருப்பவர்கள் ட்ரம்ப் ஆதரவாளர்களான Candace Owens என்னும் பெண்ணும் Tucker Carlson என்னும் அமெரிக்க அரசியல் விமர்சகரும்.
ஓராண்டுக்கு முன் Candace Owens இந்த வதந்தியைப் பரப்ப, தற்போது அதே செய்தியைக் குறித்து மீண்டும் பேசி சர்ச்சையை உருவாக்கியுள்ளார் Tucker Carlson.
Tucker Carlson: “My friend Candace Owens is a very smart…Very kind person…she wagered her professional reputation that Macron’s wife is actually a man… and then it turned out she is right.”🤡
— Republicans against Trump (@RpsAgainstTrump) March 16, 2025
pic.twitter.com/hkFOqY89T9
ஏற்கனவே அமெரிக்க பிரான்ஸ் உறவுகள் சீராக இல்லாத நிலையில், இந்த விடயம் நிலமையை மோசமாக்கலாம் என அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |