உலக பிரபலத்துக்கு பிரான்சில் கிடைத்த அவமதிப்பு: உணவகத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்
பிரபல அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை ஒருவர், பாரீஸ் ஹொட்டல் ஒன்று, இடமில்லை என தன்னைத் திருப்பி அனுப்பிவிட்டதாக சமூக ஊடகத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
உலக பிரபலத்துக்கு பிரான்சில் கிடைத்த அவமதிப்பு
23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்ற அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், தன் பிள்ளைகளுடன் பாரீஸிலுள்ள ஹொட்டல் ஒன்றிற்குச் சென்றுள்ளார்.
அப்போது, ஹொட்டலில் இடமில்லை என செரீனாவை திருப்பி அனுப்பியுள்ளார் ஊழியர் ஒருவர்.
பல மேஜைகள் காலியாக இருந்தும், தன்னை அந்த ஹொட்டல் ஊழியர் திருப்பி அனுப்பிவிட்டதாக சமூக ஊடகமான எக்ஸில் தெரிவித்துள்ளார் செரீனா.
Yikes @peninsulaparis I’ve been denied access to rooftop to eat in a empty restaurant of nicer places ? but never with my kids. Always a first. ?#Olympic2024 pic.twitter.com/lEGJR5WoEn
— Serena Williams (@serenawilliams) August 5, 2024
இவ்வளவு பிரபல வீராங்கனையை தெரியவில்லையா?
விடயம் என்னவென்றால், ஒலிம்பிக் போட்டி துவக்கம் முதலே பாரீஸில்தான் இருக்கிறார் செரீனா. அவர் ஒலிம்பிக் தீபத்தை கையில் ஏந்தி வந்ததை தொலைக்காட்சியில் உலகமே பார்த்தது.
அப்படியிருந்தும் அந்த உணவக ஊழியருக்கு செரீனாவை ஏன் அடையாளம் தெரியவில்லை என்பது புரியவில்லை.
ஒருவேளை கருப்பினப்பெண் என்பதால் அந்த நபர் அவரை அடையாளம் காணத்தவறிவிட்டாரோ என்னவோ.
எப்படியும், எக்ஸில் செரீனா தனது வருத்தத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, அவரிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டுள்ளது அந்த உணவகம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |