சவுதி மீது தொடரும் சரமாரி ஏவுகணை தாக்குதல்! கதிகலங்க வைக்கும் ஹவுத்தி: வெளியான புகைப்படங்கள்
மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியா மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய் கிழமை காலை தெற்கு நகரமான ஜிசானில் ஹவுத்தி குழுவின் ஏவுகணைகள் தாக்கியதில் 3 சவுதி குடிமக்கள் மற்றும் 2 ஏமன் நாட்டைச் சேர்ந்தவர்கள் என 5 பேர் காயமடைந்ததாக சவுதி ஊடகம் தெரிவித்துள்ளது.
ஏவுகணை தாக்குதலில் சிக்கி நகரில் உள்ள கடைகள் மற்றும் கார்கள் சேதமடைந்து கிடப்பதை சவுதி அரேபியாவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட புகைப்படங்கள் காட்டுகிறது.
எந்த வகையான ஏவுகணைகள் தாக்கியது என்ற விவரங்கள் தற்போது வரை தெரியவில்லை.
ஏமனின் ஆதரவுப்பெற்ற ஹவுத்தி போராளிகள், சிறிய டிரோன்கள், பெரிய ஏவுகணைகள் மூலம் சவுதி நகரங்கள் மற்றும் இராணுவ தளங்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஏமனில் அதிகரித்துவரும் சமத்துவமின்மையால் கோபமடைந்த ஒரு பெரிய மக்கள் இயக்கத்தின் தலைமை தான் ஹவுத்திக்கள்.
கோபமடைந்த ஹவுத்திக்கள் ஏமன் ஜனாதிபதி Abdrabbuh Mansour Hadi-ஐ அதிகாரத்திலிருந்து நீக்கிய பின்னர் 2015 ஆம் ஆண்டு போர் தொடங்கியது.
இதன் பின்னர் Hadi சவுதி அரேபியாவுக்கு தப்பிச் சென்ற பிறகு, சவுதி அரேபியாவும் கூட்டுப் படைகளும், ஏமனில் பேரழிவுகரமான வான் மற்றும் கடல்வழி தாக்குதலை தொடங்கினர், இதில் 1,00,000-க்கும் மேற்பட்ட ஏமனியர்கள் கொல்லப்பட்டனர்.
#PICTURES: #SaudiArabia's civil defense: A military projectile launched by #Houthis fell in Jazan, injuring five civilians pic.twitter.com/wUgaoOmAYv
— Saudi Gazette (@Saudi_Gazette) March 1, 2021
சவுதி அரேபியாவின் கூட்டுப் படையில் இடம்பெற்றுள்ள மற்ற நாடுகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சூடான் மற்றும் மொராக்கோ ஆகும்.