பிரித்தானியாவில் பொலிஸ் மீது தொடரும் வன்முறை: பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல்! தீயாக பரவும் பயங்கர விடியோக்கள்!
பிரித்தானியாவின் வடக்கு அயர்லாந்தின் சில பகுதிகளில் தொடர்ந்து பொலிஸ் மீது வன்முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ள விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன.
பிரித்தானியாவில் பல பகுதிகளில் புதிய பொலிஸ் மற்றும் குற்றவியல் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து "Kill The Bill" போராட்டங்கள் வலுவடைந்துள்ளன. மேலும் பொலிஸ் அதிகாரிகள் மீது கடுமையான வன்முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஞாயிற்றுக்கிழமை இரவு Newtownabbey மற்றும் Carrickfergus-ல் உள்ள பகுதிகளில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் மீது பெட்ரோல் குண்டுகள் மற்றும் செங்கற்கள் வீசப்பட்டன.
Lighting Molotov off burning car then thrown at riot landrover, Northern Ireland, 2nd night of violence pic.twitter.com/tAupQp48hu
— drogoberor (@drogoberor) April 3, 2021
Belfast-ன் புறநகரில் உள்ள Newtownabbey-ல் உள்ள Cloughfern ரவுண்டானாவில் தொடர்ச்சியாக இரண்டாவது இரவாக வன்முறை வெடித்தது, இருப்பினும் சனிக்கிழமை இரவு போல் வன்முறை நீடிக்கவில்லை.
அருகிலுள்ள Carrickfergus-ன் வடக்கு சாலைப் பகுதியிலும் ஞாயிற்றுக்கிழமை இரவு கலவரம் ஏற்பட்டது. வன்முறையில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், அதிகாரிகள் மீதும் பொலிஸ் வாகனகங்கள் மீதும் கற்கள், உலோக கம்பிகள், பட்டாசுகள் மற்றும் மேன்ஹோல் கவர்கள் என அனைத்தையும் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
What is the point in this? Destroying your own communities is not the way to protest or vent. Why is it always our @PoliceServiceNI colleagues who face the brunt of this pointless violence? @naomi_long @NIPolicingBoard pic.twitter.com/QGmNsjek3u
— Police Federation for Northern Ireland (@PoliceFedforNI) April 3, 2021
இதில் அதிகாரிகள் பலர் தீக்காயங்கள், தலை மற்றும் கால்களில் பலத்த காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று பொலிஸ் வாகனங்களை கடத்தப்பட்டு சாலையில் வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
All the #KillTheBill defenders who claim the demonstrations were nothing short of riots and the police deserved to be heavy handed.
— Ricky - Starmer made me Ex-Labour #StarmerOut (@RickyGtfour) April 4, 2021
This was Northern Ireland last night.
For the avoidance of doubt this is what a riot looks like. pic.twitter.com/mkKqmQlsh4
சாலைகளில், பொலிஸார் தாக்கப்படுவதும், ஆர்ப்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளை பொலிஸ் வாகனங்கள் மீது வீசும் பல வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்கள் தீயாக பரவிவருகின்றன.