இந்தியாவை வீழ்த்துவதற்கு இது மிகவும் உதவியாக இருந்தது! பாராட்டி தள்ளிய இங்கிலாந்து பயிற்சியாளர்
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு நாங்கள் கட்டுக்கோப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மிகவும் உதவியாக இருந்தது என்று அந்தணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர் உட் கூறியுள்ளார்.
இந்திய அணிக்கு எதிராக லீட்சில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இரண்டாவது டெஸ்ட்டில் அடைந்த தோல்விக்கு பின், இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி இந்தியாவை வீழ்த்தியது.
இது குறித்து இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் Chris Silverwood கூறுகையில், இந்த போட்டியில் எங்கள் அணி ஒரு கட்டுக்கோப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதுமட்டுமின்றி எங்கள் அணியின் வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடினர்.
அதற்காக நான் அவர்களை பாராட்டுகிறேன். லார்ட்ஸில் நடந்த இரண்டாவது டெஸ்ட் தோல்விக்கு பின் நானும், ஜோ ரூட்டும் பேசினோம். அப்போது இந்த போட்டியில் இருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம், என்ன செய்திருந்தால், அது நன்றாக முடிந்திருக்கும் என்று யோசித்தோம்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி எங்களை மிகவும் கடுமையாகவே தாக்கினர். சில அவசரமான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு கடடாயப்படுத்தினர். அதுமட்டுமின்றி மிகவும் ஆக்ரோசமான ஆட்டமாகவும் இருந்தது.
இந்த உக்கிரத்தை நாம் குறைக்க வேண்டும் என்று நினைத்தோம், ஏனெனில் இந்திய அணி ஒரு முறை மேலே வந்துவிட்டால், அவர்களைத் தடுப்பது மிகவும் கடினம், எனவே நாம் எப்படி அவர்களுக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்று யோசித்தோம்.
அதை போட்டியில் சரியாக வீரர்கள் செய்தனர். அணியின் தலைவரான ரூட் ஒரு தலை சிறந்த கேப்டன் என்றே சொல்வேன்.
அவர் இப்போது வரையும் புதிது புதிதாக கற்றுக் கொண்டு தான் இருக்கிறார்.
லார்ட்ஸில்(இரண்டாவது டெஸ்ட் போட்டியில்) அவர் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு, மூன்றாவது டெஸ்ட் போட்டியான லீட்ஸில் அதை நிரூபித்து காட்டிவிட்டார்.
அவர் ஒவ்வொரு விஷயங்களையும் கற்றுக் கொண்டு வருகிறார். இது அணியின் கேப்டனுக்கு ஒரு சிறந்த பண்பு என்று கூறியுள்ளார்.