Smart phone-ஐ கொண்டு டிவி சேனல்களை மாற்றுவது எப்படி? இனி மறந்து வைத்த ரிமோட்டை தேடும் தொல்லை இல்லை
வீட்டில் டிவி முன்னாடி உட்கார்ந்து கொண்டு ரிமோட்டை தேடுவது பலருக்கும் பழகிவிட்டது. இவ்வாறானவர்களில் பலர் ரிமோட் கிடைக்காத பட்சத்தில் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் கொண்டே டிவியை இயக்கலாம்.
இதற்கு தேவையானவை
ஸ்மார்ட் டிவியில் வயர்லெஸ் கனெக்டிவிட்டி ஆப்ஷன் இருக்க வேண்டும்.
ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 4.4 அல்லது அதற்கும் அதிக இயங்குதளம் கொண்டிருக்க வேண்டும்.
ஸ்மார்ட் டிவி சாதனம் அல்லது பெட்டி ஏபிகே (APK) ஃபைல்களை சப்போர்ட் செய்ய வேண்டும்.
வழிமுறைகள்
ஸ்மார்ட்போனில் டிவி செயலியை திறந்து ஸ்மார்ட் டிவி சாதனம் திரையில் தெரியும் வரை காத்திருக்க வேண்டும்.
உங்களின் டிவி மற்றும் ஸ்மார்ட்போனில் செயலி கேட்கும் அனுமதிகளை (Permission) உறுதி செய்ய வேண்டும்.
செயலி இணைக்கப்பட்ட பின்னர் திரையில் தெரியும் ரிமோட் வகைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
டிபேட் மோட் (Dpad mode) - இது க்ளிக் வசதி கொண்ட ரிமோட் ஆகும்.
டச்பேட் மோட் (Touchpad mode) - இது தொடுதிரை வசதி கொண்ட ரிமோட் ஆகும்.
மவுஸ் மோட் (Mouse mode) - டிவி செயலிகளில் பயன்படுத்தக்கூடிய மோட் ஆகும்.