பாரீஸ் ஒலிம்பிக்கில் கடும் சர்ச்சைக்குள்ளான இளம்பெண்: விசாரணையைத் துவக்கியது பிரான்ஸ்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில், தனது பாலினம் தொடர்பில் கடும் சர்ச்சைக்குள்ளானார் அல்ஜீரிய நாட்டு குத்துச்சண்டை வீராங்கனை ஒருவர்.
ஒலிம்பிக்கில் கடும் சர்ச்சைக்குள்ளான இளம்பெண்
நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச்சண்டை போட்டி ஒன்று ஊடகங்களில் பெருமளவில் கவனம் ஈர்த்தது.
அதற்குக் காரணம், அந்தப் போட்டியில் பங்கேற்ற அல்ஜீரிய வீராங்கனையான Imane Khelif என்னும் பெண், வெறும் 46 விநாடிகளில், தன்னுடன் மோதிய இத்தாலி நாட்டு வீராங்கனையான Angela Carini என்னும் பெண்ணை, இரண்டே குத்துக்களில் தோற்கடித்தார்.
அடிவாங்கிய அந்த Angela Carini என்னும் பெண், Khelif அடித்த அடி பெண்கள் அடித்தது போல இல்லை என்றும், தனக்கு கடுமையான வலி ஏற்பட்டுள்ளதகாவும் கண்ணீருடன் தெரிவித்தார்.
களமிறங்கிய பிரபலங்கள்
இந்நிலையில், Angelaவுக்கு ஆதரவாக, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப், அவரது ஆதரவாளரான JD Vance, உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க் மற்றும் ஹாரி பாட்டர் எழுத்தாளரான JK Rowling ஆகியோர் குரல் கொடுக்க விடயம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.
பெண்கள் குத்துச்சண்டை போட்டிகளில் ஆண்களை அனுமதிக்கக்கூடாது என்னும் ரீதியிலும், Angelaவுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் அவர்கள் விமர்சனங்கள் முன்வைத்தார்கள்.
புகாரளித்த அல்ஜீரிய வீராங்கனை
இந்நிலையில், தன்னை ஒன்லைனில் சைபர் துன்புறுத்தல் செய்ததாக சம்பந்தப்பட்டவர்கள் மீது Khelif புகார் செய்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, இந்த விடயம் தொடர்பாக பிரான்ஸ் அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |