சர்ச்சைக்குரிய புலம்பெயர்தல் சட்டம்: பிரான்சில் வெற்றிகரமாக நிறைவேறியது...
பல மாத கடும் விவாதங்களுக்குப் பின், சர்ச்சைக்குரிய புலம்பெயர்தல் சட்டம் பிரான்சில் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது.
வெற்றிகரமாக நிறைவேறிய சட்டம்
புலம்பெயர்தலை கடுமையாக கட்டுப்படுத்தும் அந்த புதிய புலம்பெயர்தல் மசோதாவுக்கு, ஆளும் மேக்ரான் கட்சி மட்டுமின்றி, Marine Le Penஇன் வலதுசாரிக் கட்சியான National Rally (RN) கட்சியும் ஆதரவாக வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளன.
உண்மையில், பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவையில் ஆளும் மேக்ரான் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதால், RN கட்சியின் ஆதரவு இல்லாமலேயே அவர்களால் எளிதாக வெற்றி பெற்றிருக்கமுடியும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
AFP
புதிய புலம்பெயர்தல் சட்டம்
புதிய புலம்பெயர்தல் சட்டம், குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் மீது கண்டிப்புடன் நடந்து, அவர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற்றும் நோக்கம் கொண்டதாகும்.
REUTERS
மேலும், சட்டம் ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் என கருதப்படும் வெளிநாட்டவர்களை பிரான்சிலிருந்து நாடுகடத்துதலை இந்த சட்டம் விரைவாக்க உதவும்.
அதே நேரத்தில், பணியாளர் தட்டுப்பாடு நிலவும் துறைகளில் பணியாற்றும் ஆவணங்களற்றோருக்கு, சில நிபந்தனைகளின் கீழ், சட்டப்படி பிரான்சில் வாழ அனுமதிக்கவும், புதிய சட்டத்தில் வழிவகை உள்ளது என பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gérald Darmanin தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |