தெரிந்தே செய்தாரா? சர்ச்சையை கிளப்பிய ரோகித்தின் செயல்!
பரபரப்பான கட்டத்தில் கடைசி ஓவரை உனத்கட்டிற்கு அளித்தது ஏன் என்று, மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோகித் சர்மா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஐபிஎல்-யில் நேற்று நடந்த லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது. பரபரப்பாக நடந்த இந்த போட்டியின் இறுதி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 17 ஓட்டங்கள் தேவைப்பட்டது. பொல்லார்ட் இந்த போட்டியில் ஒரு ஓவர் கூட வீசாத நிலையில் அவர் இறுதி ஓவரை வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அணித்தலைவர் ரோகித் சர்மா அந்த ஓவரை வீச உனத்கட்-ஐ அழைத்தார்.
கடந்த காலங்களில் உனத்கட்டின் ஓவரை தோனி அடித்து நொறுக்கியிருக்கிறார். அந்த விடயம் தெரிந்தும் ரோகித் சர்மா அவருக்கு வாய்ப்பளித்தார். முதல் பந்தில் பிரிட்டோரியஸின் விக்கெட்டை உனத்கட் வீழ்த்தினாலும், அடுத்தடுத்த பந்துகளை சிதறடித்த தோனி கடைசி பந்தில் பவுண்டரி விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.
இதுவரை தோனிக்கு எதிராக மட்டும் 11 பந்துகளை வீசியுள்ள உனத்கட், அதில் 47 ஓட்டங்களை வீட்டுக் கொடுத்துள்ளார். உனத்கட் அழுத்தமான சூழலில் சொதப்புகிறார் என தெரிந்தும், ஏன் ரோகித் அவருக்கு பவுலிங் கொடுத்தார் என்று சர்ச்சை கிளம்பியுள்ளது. அனுபவமிக்க வீரர் பொல்லார்டை பயன்படுத்தியிருக்கலாம் என்றும் ஒரு சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.