சர்ச்சையை கிளப்பிய இலங்கை வீரருக்கு அவுட் கொடுக்கப்பட்ட விதம்! அவரிடமே வந்து மன்னிப்பு கேட்ட பொல்லார்ட்
வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை அணிகள் இடையிலான போட்டியின் போது ஏற்பட்ட சர்ச்சைக்குரிய விடயத்துக்காக பொல்லார்ட் தன்னிடம் மன்னிப்பு கேட்டார் என குணத்திலகா கூறியுள்ளார்.
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியின் போது குணத்திலகா, பொல்லார்ட்டின் ஒரு பந்து வீச்சினை எதிர்கொண்டு அதனை தனது கால்களுக்கு முன்னால் தடுத்து நிறுத்தினார்.
மறுபக்கத்தில் இருந்த நிசாங்க அதற்கு ஒரு ஓட்டத்தினை ஓட முயன்ற சந்திர்ப்பத்தில் குணதிலக்காவினால் வலியுத்தலால் மீண்டும் திருப்பி அனுப்பட்டார்.
அதையடுத்து குணத்திலகா, கிறிஸ் கோட்டுக்கு பின்னோக்கி திரும்ப முயற்சிக்கையில் எதிர்பாராத விதமாக அந்த பந்து அவரின் கால்களில் சிக்கி பின்நோக்கி நகர்ந்தது.
இதனிடையே ரன்-அவுட்டை மேற்கொள்ள பந்தைப் பிடிக்கும் முயற்சியினை மேற்கொண்ட பொல்லார்ட்டுக்கு குணதிலக்காவின் இந்த நடவடிக்கை இடையூறாக அமைந்தமையினால் நடுவரிடம் முறையிட்டார்.
பின்னர் மூன்றாவது நடுவர் அவர் ஆட்டமிழந்ததாக அறிவித்தார்.
இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது இந்நிலையில் இது குறித்து விபரிக்க பொல்லார்ட் போட்டிக்கு பின்னர் தன்னிடம் வந்ததாக குணத்திலகா கூறியுள்ளார்.
இவ்வாறு வந்த பொல்லார்ட் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும், ஆடுகளத்தில் அந்த சம்பவம் அரங்கேறிய நேரத்தில் தான் அதை சரியாகப் பார்க்கவில்லை என்றும் கூறியதாக தெரிவித்துள்ளார்.