தண்டனை பெற்ற குற்றவாளியான ட்ரம்பால் இனி கனடாவில் நுழைய முடியுமா?
அதிக தீவிரத்தன்மை கொண்ட குற்றங்களில் தண்டனை பெற்றுள்ளதால், டொனால்டு ட்ரம்ப் இனி கனடாவில் நுழைய முடியாது என்றே சட்டத்தரணி ஒருவர் விளக்கமளித்துள்ளார்.
அனுமதிக்கப்பட வாய்ப்பில்லை
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்டு ட்ரம்ப் தொழில் ரீதியாக ஆதாயம் பெறுவதற்காக போலியான தரவுகளை உருவாக்கியதாக முன்வைக்கப்பட்டுள்ள 34 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவர் 4 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனைக்கு விதிக்கப்படலாம். இந்த நிலையில், குற்றவாளி என நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட ஒருவர், கனடாவில் அனுமதிக்கப்பட வாய்ப்பில்லை என்றே ரொறன்ரோவை சேர்ந்த குடிவரவு சட்டத்தரணியும் கொள்கை ஆய்வாளருமான Mario Bellissimo தெரிவித்துள்ளார்.
காத்திருக்க நேரிடும்
ட்ரம்புக்கான தண்டனை காலம் முடித்து கனடா எல்லையை கடக்க இன்னொரு 5 ஆண்டுகள் அவர் காத்திருக்க நேரிடும் என்றும் Bellissimo தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அவர் மறுவாழ்வு சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆனால், மிக மிக அவசரம் என்பதை குறிப்பிட்டு அவர் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அதுவும் மிக மிக அரிதாகவே அனுமதிக்கப்படும் என்றார். இருப்பினும், ட்ரம்ப் ஜனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டால், சிறப்பு அனுமதி அளிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக Bellissimo குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |