பிரித்தானிய சாலையில் திடீரென உலாவந்த அணு ஆயுத வாகனங்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி
பிரித்தானிய சாலை ஒன்றில் எதிர்பாராதவிதமாக அணு ஆயுத வாகனங்கள் அணிவகுத்ததைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஏற்கனவே ரஷ்ய ஜனாதிபதி புடின் அணு ஆயுத எச்சரிக்கைகள் விடுத்துவரும் நிலையில், திடீரென பிரித்தானிய சாலையில் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் இராணுவ வாகனங்கள் அணிவகுத்ததால் வாகன சாரதிகள் அதிர்ச்சியடைந்தார்கள்.
லண்டனைச் சேர்ந்த Ian Laurie (48) தனது வாகனத்தில் Oxfordshire பகுதியில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, எதிரே வரும் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதைக் கவனித்துள்ளார்.
Credit: Ian Laurie
அப்போது,நான்கு பிரித்தானிய இராணுவ வாகனங்களை ஆறு பொலிஸ் வாகனங்கள் வழிநடத்திச் சென்றதை அவர் கண்டுள்ளார்.
திடீரென அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய இராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் சென்றதைக் கண்டதால் தான் அதிர்ச்சியடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே புடின் அணு ஆயுதங்கள் வீசுவதாக எச்சரித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், திடீரென பிரித்தானிய சாலையில் அணு ஆயுத வாகனங்களைப் பார்ப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்ததாக தெரிவித்துள்ளார் Ian Laurie.