கோபத்தில் பேட்டை குத்திய நட்சத்திர வீரருக்கு நேர்ந்த நிலை! பைனலில் அவுஸ்திரேலியாவுடன் மோதும் நியூசிலாந்து அணிக்கு பெரிய இழப்பு
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி மற்றும் அதைத்தொடர்ந்து நடக்கவிருக்கும் இந்தியா சுற்றுப்பயணத்திலிருந்து நியூசிலாந்து நட்சத்திர வீரர் டிவான் கான்வே விலகியுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) துபாயில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியிலிருந்து நியூசிலாந்து நட்சத்திர வீரர் டிவான் கான்வே விலகியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், அவுட்டான பிறகு அதிருப்தியடைந்த கான்வே, பேட்டை கையால் குத்தி கோபத்தை வெளிப்படுத்தினார்.
இதனால் கான்வே காயம் அடைந்தார், இதைத்தொடர்ந்து அவருக்கு x-ray மேற்கொண்டதில் கையில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது உறுதியானதாக நியூசிலாந்து கிரக்கெட் தெரிவித்துள்ளது.
எழும்பு முறிவு காரணமாக கான்வே, டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி மற்றும் அதைத்தொடர்ந்து நடக்கவிருக்கும் இந்திய சுற்றுப்பயணத்திலிருந்து விலகியுள்ளார் என நியூசிலாந்து கிரிக்கெட் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியிலிருந்து கான்வே விலகியுள்ளது நியூசிலாந்து அணிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
இதுவரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இரு அணிகளும் டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.