குக் வித் கோமாளி சீசன் 6ன் போட்டியாளர்கள்.., யார் யார் தெரியுமா?
தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் அதிக ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி விளங்குகிறது.
முதல் சீசன் கொடுத்த வெற்றி அடுத்தடுத்து சீசன்கள் ஒளிபரப்பாகி தற்போது 5வது சீசன் வரை நடந்து முடிந்துள்ளது.
குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் செஃப் தாமு, மற்றும் மத்தம்பட்டி ரங்கராஜனுடன் சேர்ந்து இந்த முறை செஃப் கௌஷிக்கும் இணைந்துள்ளார்.
இந்த வாரம் ஞாயிற்று கிழமை முதல் சீசன் 6 துவங்க உள்ள நிலையில் போட்டியாளர்களின் முழு பட்டியல் வெளியாகியுள்ளது.
அதே போல் சில நாட்களுக்கு முன்னர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முக்கிய 4 போட்டியாளர்கள் யார் யார் என்கிற அறிவிப்பு வெளியானது.
அதன்படி, சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை பிரியா ராமன், அமரன் படத்தில் நடித்திருந்த உமர் லத்தீப், ஷபானா ஆகியோர் கலந்து கொள்வது உறுதியானது.
இவர்களை தொடர்ந்து, நேற்று இரவு வெளியிடப்பட்ட புதிய புரோமோவில் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள உள்ள, மொத்த போட்டியாளர்களின் விவரங்களும் வெளியாகி உள்ளது.
அதன்படி மதுமிதா, கஞ்சா கருப்பு, யூ டியூப் பிரபலம் சௌந்தர்யா, பிக்பாஸ் டைட்டில் ராஜு மற்றும் விவசாயியான நந்தகுமார் மற்றும் மற்றொரு பெண் ஆகியோர் கலந்துக் கொள்ள உள்ளனர்.
மேலும், இந்த முறை பழைய கோமாளிகளுடன் சௌந்தர்யா, பூவையார், உள்ளிட்ட நான்கு பேர் களமிறங்கி உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |