குக் வித் கோமாளி ஷிவாங்கிக்கு திருமணம் எப்போது தெரியுமா? அவரே கொடுத்த தெளிவான பதில்
குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி தனது திருமணம் குறித்து இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் ஷிவாங்கி. எப்போதும் குழந்தை தனமாக நடந்து கொள்ளும் சிவாங்கியை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போது பெரிதாக ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.
ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக சிவாங்கி வந்த போது அனைவரும் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். சிவாங்கியின் சுட்டி தனங்கள் பெரிதும் ரசிக்கப்பட்டதால் சினிமாவில் நடிக்கும் அளவிற்கு பிரபலமாகியுள்ளார்.
தொடக்கத்தில் ஷிவாங்கி, சூப்பர் சிங்கர் போட்டியாளர்களுள் ஒருவரான சாம் விஷாலை காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் பின்னர் வெறும் நண்பர்கள் என கூறி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதன் பின் அஸ்வினை காதலிக்குமாறு அனைவரும் கூற அதெல்லாம் இல்லை அஸ்வின் எனது Crush மட்டும் தான் என்று விளக்கமளித்தார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் ஷிவாங்கியிடம் எப்போது திருமணம் என்று கேட்டு நச்சரித்துள்ளனர்.
அதற்கு ஷிவாங்கி எனக்கு திருமணம் ஆக இன்னும் 8 வருடங்கள் உள்ளன. வாழ்வில் நிறைய சாதிக்கனும் அதுக்கு பிறகு தான் திருமணம் என்று தெரிவித்துள்ளார்.