விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இனி ஒளிபரப்பப்படாது.., ஏன் தெரியுமா?
தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் அதிக ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சியாக 2020ஆம் ஆண்டில் ஆரம்பித்த குக் வித் கோமாளி விளங்குகிறது.
முதல் சீசன் கொடுத்த வெற்றி அடுத்தடுத்து சீசன்கள் ஒளிபரப்பாகி தற்போது 5வது சீசன் வரை நடந்து முடிந்துள்ளது.
அந்தவகையில், குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசன் ஜனவரி மாதம் தொடங்கியது.
இந்த சீசன் ஆரம்பிக்கும் போதே, நான்கு சீசன் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் இருந்து விலகி, சன் தொலைக்காட்சியில் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சிக்கு நடுவராக சென்றார்.
இதையடுத்து, வெங்கடேஷ் பட்டிற்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக இருந்தார். இந்த ஐந்தாவது சீசனில் ரக்ஷன் மற்றும் மணிமேகலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.
குக் வித் கோமாளி முடியும் தருவாயில் இருந்த போது, குக்காக கலந்துகொண்ட பிரியங்கா மற்றும் தொகுப்பாளர் மணிமேகலை இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால் தன்னை வேலை செய்யவிடாமல் பிரியங்கா தடுக்கிறார் என்று, அறிக்கை வெளியிட்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறினார்.
இதற்கடுத்து போட்டியாளராக சிறப்பாக சமைத்த பிரியங்கா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றார். டைட்டிலை வென்ற பிரியங்காவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
இப்படி சர்ச்சையோடு முடிவடைந்துள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு விஜய் டிவி எண்ட் கார்டு போட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
அதாவது, வேறு ஒரு சமையல் நிகழ்ச்சியை விஜய் டிவியில் தொடங்க இருப்பதாகவும், இந்நிகழ்ச்சியின் நடுவர்களான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் செப் தாமுவே கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
மேலும், ரக்ஷன், ஜாக்குலின் தொகுத்து வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
குக்கிங் வித் விஜய் ஸ்டார் என்கிற பெயரில் இந்த ஷோ விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |