இயக்குநரின் பேத்தியை திருமணம் செய்த நடிகர் அஸ்வின்
நடிகர் அஸ்வின் குமார், மறைந்த இயக்குநர் ராஜசேகரின் பேத்தி புவனேஸ்வரியை இன்று கோவையில் வைத்து திருமணம் செய்துள்ளார்.
நடிகர் அஸ்வின் திருமணம்
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் அஸ்வின் குமார்.

மேலும், ஓ காதல் கண்மணி, ஆதித்யா வர்மா, ஓ மணப்பெண்ணே, ஹாட் ஸ்பாட் 2 மச் உள்ளிட்ட திரைப்படங்களிலும் அஸ்வின் குமார் நடித்திருக்கிறார்.
மேலும், பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும், இணைய தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், 35 வயதான அஸ்வின் குமார், இன்று புவனேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற இந்த திருமணத்தில், மணமக்களின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.
மணமகள் புவனேஸ்வரி, மறைந்த இயக்குநர் ராஜசேகரின் பேத்தி ஆவார்.
ராஜசேகர், தம்பிக்கு எந்த ஊரு, படிக்காதவன், மாவீரன், மாப்பிள்ளை, தர்மதுரை, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். ராஜசேகர் 1991 ஆம் ஆண்டில் தனது 41வயதிலே காலமானார்.