குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து.., முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத் மரணத்தில் திடீர் திருப்பம்
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் பயணம் உயிரிழக்க மனிதத் தவறே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்தில் திருப்பம்
கடந்த 2021 ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி அன்று, கோவையில் இருந்து உதகைக்கு சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்த விபத்திற்கு மனிதத் தவறே காரணம் என்று விமானப்படை அறிக்கை அளித்துள்ளது. இந்த தகவலானது நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் தாக்கலான பாதுகாப்புக்கான நிலைக்குழு அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
கடந்த 2017 -ம் ஆண்டு 2022 -ம் ஆண்டு வரையிலான காலத்தில் 34 விமானப்படை விமானங்கள் விபத்தில் சிக்கியுள்ளது. இதில், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தும் அடங்கும்.
இந்த குன்னூர் ஹெலிகாப்டர் விபத்திற்கு ஹெலிகாப்டரை இயக்கிய குழுவின் தவறே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மாற்றம் காரணமாக தடுமாறிய விமானி, ஹெலிகாப்டரை மேக கூட்டத்தின் நடுவே செலுத்திய போது நிலைதடுமாறி நிலத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
ஹெலிகாப்டரில் இருந்த ரிகார்டரில் பதிவான விபரங்களின் அடிப்படையில் விமானப்படை அறிக்கை அளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |