ஒருநாள் போட்டியில் முதல் சதமே 149 ரன்! வங்காளதேசத்தை வீழ்த்தி.,அவுஸ்திரேலியா ஆறுதல் வெற்றி
வங்காளதேசத்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மூவர் அரைசதம்
அவுஸ்திரேலியா, வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டாக்காவில் நடந்தது.
முதலில் ஆடிய வங்காளதேச அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 274 ஓட்டங்கள் எடுத்தது. டௌஹித் ஹிரிடோய் 83 ஓட்டங்களும், லித்தன் தாஸ் 58 ஓட்டங்களும், மொஸாதெக் ஹொசைன் 56 ஓட்டங்களும் எடுத்தனர். சேவியர் பார்ட்லெட், மேட் ரென்ஷா தலா 2 விக்கெட்டுகளும், பென் டிவார்ஷுஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

போராடி ஆறுதல் வெற்றி
பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் இங்கிலிஸ் 21 (12) ஓட்டங்களில் வெளியேற, மேட் ரென்ஷா மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
எனினும் தொடக்க வீரர் கூப்பர் கோனொலி அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார். லபுசாக்னே 29 ஓட்டங்களிலும், கிரீன் மற்றும் பீக் தலா 27 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

சரவெடியாய் ஓட்டங்களை சேர்த்த கூப்பர் கோனொலி (Cooper Connolly) 87 பந்துகளில் தனது முதல் ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.
அதன் பின்னரும் அதிரடியாக ஆடிய அவர், நிலைத்து நின்று ஆடி 149 ஓட்டங்கள் (6 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள்) குவிக்க அவுஸ்திரேலியா 1 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.
வங்காளதேச தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷோரிபுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Shoriful Islam delivers a stunning 6-wicket haul against Australia in the 3rd ODI. Pure dominance! pic.twitter.com/HhjTdztnXq
— Bangladesh Cricket (@BCBtigers) June 14, 2026
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |