பெண் பொலிஸ் அதிகாரி படுகொலை... ஆசிய நாட்டவரை தேடிச் சென்று கைது செய்த பிரித்தானிய அதிகாரிகள்
சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்னர் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரை கொலை செய்துவிட்டு பாகிஸ்தானுக்கு தப்பிய நபரை கைது செய்து அழைத்து வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானுக்கு தப்பிய நபர்
கடந்த 2006ல் Sharon Beshenivsky என்ற பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாகியிருந்த Piran Ditta Khan என்பவரை விசாரணை நிமித்தம் பிரித்தானியாவுக்கு அழைத்து வந்துள்ளனர்.
74 வயதான திட்டா கான் தற்போது மேற்கு யார்க்ஷயர் பகுதியில் பொலிசார் வசம் உள்ளார். வியாழக்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் ஆஜராக உள்ளார்.
@AP
பிராட்ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ள சந்தேகத்துக்குரிய நிறுவனம் ஒன்றை சோதனையிடுவதற்காக ஷாரோன் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றுள்ளனர். பணியில் இணைந்து 9 மாதங்களில் ஷாரோன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
7வது பெண் அதிகாரி
மேலும் பணியில் இருக்கும் போது துப்பாகிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகும் 7வது பெண் அதிகாரி ஷாரோன். இந்த வழக்கில், தலைமறைவாகியிருந்த திட்டா கானை பிரித்தானியாவில் அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு 2006ல் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
திட்டா கான் மீது கொலை, கொள்ளை, ஆயுதங்கள் வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அதிகாரிகளால் கடந்த 2020ல் திட்டா கான் கைதாகியுள்ளார். இதனையடுத்து பிரித்தானிய அதிகாரிகள் அவர் தொடர்பில் ஆவணங்களை சமர்ப்பித்து நாடுகடத்தும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.