Copa America... கனடாவை ஊதித்தள்ளிய அர்ஜென்டினா: சாதித்த மெஸ்ஸி
கோபா அமெரிக்கா அரையிறுதியில் கனடாவை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது அர்ஜென்டினா.
தொடர்ந்து மூன்றாவது முறையாக
கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் Julian Alvarez மற்றும் அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸி ஆகியோர் தலா ஒரு கோல்கள் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து 2-0 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியுள்ளது அர்ஜென்டினா.

மட்டுமின்றி, இந்தத் தொடர்பில் தமது முதல் கோலை மெஸ்ஸி பதிவு செய்தார். மேலும், மெஸ்ஸி தலைமையில் இது தொடர்ந்து மூன்றாவது முறையாக அர்ஜென்டினா அணி முக்கிய தொடரில் இறுதிப் போட்டிக்கு நுழைகிறது.

2021ல் பிரேசில் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று கோபா அமெரிக்கா கிண்ணத்தை அர்ஜென்டினா தட்டித்தூக்கியது. 2022ல் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் பெனால்டியில் கத்தார் உலகக் கிண்ணத்தையும் வென்றுள்ளது.
மெஸ்ஸி இரண்டாவது இடத்தில்
தற்போது 2024ல் மீண்டும் கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் மெஸ்ஸி அணி நுழைந்துள்ளது. புதன்கிழமை நடக்கும் இன்னொரு அரையிறுதியில் வெல்லும் உருகுவே அல்லது கொலம்பியா அணியுடன் ஞாயிறன்று இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மோத உள்ளது.

இதனிடையே, சர்வதேச கோல் பங்களிப்பு வரிசையில் ரொனால்டோவுக்கு அடுத்து இரண்டாவது இடத்திற்கு மெஸ்ஸி முன்னேறியுள்ளார். ரொனால்டோ 130 கோல்களுடன் முதலிடத்திலும், தற்போது 109 கோல்களுடன் மெஸ்ஸி இரண்டாவது இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |