பூங்காவில் படுத்து இருந்த நபரை...தீவைத்து கொளுத்திய மர்ம பெண்: புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸார்!
அமெரிக்காவின் கலிபோர்னியா உள்ள பூங்கா ஒன்றில் பாட்ரிசியா காஸ்டிலோ(48) என்ற பெண் ஒருவர், அங்கு படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்த ஆண் ஒருவரை தீ வைத்து கொளுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
கலிபோர்னியாவின் சாங்கரில் உள்ள ஒரு பூங்காவில் பாட்ரிசியா காஸ்டிலோ, வியாழன் இரவு 9 மணிக்குப் பிறகு, பூங்காவின் புல் மீது படுத்து இருந்த ஆண் ஒருவர் மீது பெட்ரோலை ஊற்றியுள்ளார்.
பின்னர் அந்த நபரை பாட்ரிசியா காஸ்டிலோ தீ வைத்து எரித்துள்ளார் என பொலிஸார் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் இதுத் தொடர்பான வீடியோ காட்சிகள் பதிவிட்டு தெரிவித்துள்ளனர்.
அந்த வீடியோ பதிவில், காஸ்டிலோ பாதிக்கப்பட்டவருக்கு அருகில் சென்று கோப்பையில் உள்ள பெட்ரோலை அவர் மீது வீசுவது, பின் காஸ்டிலோ ஒரு லைட்டரைத் தூண்டி பாதிக்கப்பட்டவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது போன்றவை இடம்பெற்றுள்ளது என சாங்கர் காவல்துறை அந்தப் பதிவில் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் காஸ்டிலோ மீது கொலை முயற்சி, தீ வைத்து எரித்தல் மற்றும் சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காஸ்டிலோவுக்கு பெட்ரோலை வழங்கியதாக லியோனார்ட் ஹாக்கின்ஸ் என்ற இரண்டாவது நபரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஹாக்கின்ஸ் மீது என்ன குற்றம் சாட்டப்பட்டது என்பது உடனடியாகத் தெரியவில்லை. காஸ்டிலோவும் பாதிக்கப்பட்ட பெண்ணும் ஒருவரையொருவர் அறிந்திருக்கிறார்களா அல்லது அதன் நோக்கம் என்ன என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை.
கூடுதல் செய்திகளுக்கு: முதியோர் மருத்துவமனையில் டாங்கி தாக்குதல்: குற்றத்தை மறைக்க ரஷ்ய வீரர்கள் செய்த அவலமான செயல்
சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சாங்கர் காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.