வீடே மணமணக்கும் கொத்தமல்லி பொங்கல்.., எப்படி தயாரிப்பது?
கோயிலில் வழங்கப்படும் வெண் பொங்கல் என்றாலே தனிச்சுவை தான்.
அதேபோல், காலை உணவு பட்டியலில் பலருக்கும் மிகவும் பிடித்தமான உணவு பொங்கல்.
அந்தவகையில், மணமணக்கும் கொத்தமல்லி பொங்கலை வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி- ½ கப்
- பாசி பருப்பு- ½ கப்
- கொத்தமல்லி- ஒரு கைப்பிடி
- கறிவேப்பிலை- 2 கொத்து
- பச்சை மிளகாய்- 3
- தண்ணீர்- 3 கப்
- மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
- உப்பு- தேவையான அளவு
- நெய்- 4 ஸ்பூன்
- முந்திரி- 5
- மிளகு- 1 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- இஞ்சி- 1 துண்டு
- பெருங்காயம்- ¼ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் பாசி பருப்பை சேர்த்து 2 முறை நன்கு கழுவிக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு குக்கரில் கழுவிய அரிசி, பருப்பு, உப்பு, தண்ணீர், அரைத்த கலவை, மஞ்சள் தூள், 1 ஸ்பூன் நெய் சேர்த்து 4 விசில் விட்டு வேகவைத்து மசித்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து வாணலில் நெய் சேர்த்து முந்திரி, மிளகு, சீரகம், நறுக்கிய இஞ்சி மற்றும் பெருங்காயம் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
இறுதியாக வதக்கிய கலவையை பொங்கலில் சேர்த்து கலந்தால் சுவையான கொத்தமல்லி பொங்கல் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |