இரத்த அழுத்தத்தை குறைக்கும் கொத்தமல்லி பொடி! எப்படி தயாரிக்கலாம்?
பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்டோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். உயர் இரத்த அழுத்தம் என்பது மிகவும் பொதுவான வாழ்க்கை முறை நோய்களில் ஒன்றாகும். இது தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்களுக்கும் ஏற்படுகிறது.
இது பல்வேறு இதய நோய்களுக்கான மிகப்பெரிய ஆபத்தாகும். எனவே இதிலிருந்து விடுதலை பெற கொத்தமல்லி பெரிதும் உதவுகின்றது.
தற்போது இதனை எப்படி எடுத்து கொள்வது என இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- கொத்தமல்லி - 2 கட்டு
- பெருங்காயம் - 1 துண்டு
- கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 10
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
- புளி - சிறிதளவு
செய்முறை
புளியை வெறும் சட்டியில் போட்டு வறுத்துத்தெடுத்து கொள்ளுங்கள்.
எண்ணெய் விட்டு பெருங்காயம், கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் அனைத்தையும் அடுத்தடுத்து போட்டு வறுத்து கொள்ளுங்கள்.
அனைத்தும் ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் கொத்தமல்லியை சேர்த்து பொடித்து கொள்ளுங்கள்.
சத்தான சுவையான கொத்தமல்லி பொடி ரெடி. இதனை சாதத்திலும் போட்டு சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம்.