Tips For Weight Loss: தட்டையான வயிறு வேண்டுமா? வெறும் வயிற்றில் இந்த தண்ணீர் குடிங்க
சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் மூலிகைகளில் கொத்தமல்லி அல்லது தனியாவுக்கு என்றுமே முக்கிய இடமுண்டு.
கொத்தமல்லி இல்லாமல் சமையலே இல்லை என்று கூறலாம், உணவுக்கு நறுமணத்தை வழங்குவது தனியா தான்.
இந்த பதிவில் கொத்தமல்லி நீர் அருந்துவதால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.
செரிமானத்தை தூண்டுவதுடன் எடை இழப்புக்கு காரணமாகிறது, வளர்சிதை மாற்றத்தை சீராக்குவதுடன் சருமம் மற்றும் முடி தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்யும்.
iStock images
இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் மற்றும் இரும்பு சத்துக்களால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லி தண்ணீர் குடிப்பது சருமத்தை ஆரோக்கியமாக்கும்.
காரமான உணவுகளை உட்கொள்ளும் போது உடற்சூடு அதிகரிக்கும், கொத்தமல்லி தண்ணீரை பருகி வந்தால் உடல் சூடு தணியும்.
தினமும் கொத்தமல்லி தண்ணீரை குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீரில் வெளியேறும், சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
மூட்டு வீக்கத்தை குறைப்பதன் மூலம் மூட்டு வலியை சரிசெய்கிறது.
கொத்தமல்லி தண்ணீர் தயாரிப்பது எப்படி?
பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கப் நீரை ஊற்றி கொதிக்க வைக்கவும், இதில் ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதைகளை சேர்த்து கொதிக்க விடவும், தேன் சேர்த்து அருந்தலாம்.
இன்னும் அதிகப்படியான நன்மைகளை பெற விரும்பினால், இரண்டு நிமிடத்திற்கு வெறும் தண்ணீரில் கொத்தமல்லி விதைகளை ஊறபோட்டும் வைக்கலாம்.
தண்ணீர் பாதியாக வற்றியவுடன் வடிகட்டி குடித்தால் பல நன்மைகளை பெறலாம்.