முகம் நிலவை போல் ஜொலிக்க உதவும் இயற்கை பேஸ்பேக்.., எப்படி தயாரிப்பது?
சூரிய கதிர்கள், உணவு மாற்றம் போன்றவற்றால் முகம் மற்றும் உடம்பு பொலிவிழந்து நிறம் மங்குவதை ஏற்படுத்துகிறது.
அந்தவகையில், வீட்டிலேயே இயற்கையாகவே முகப்பொலிவை அதிகரிக்க உதவும் சோள மாவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- சோள மாவு - 1 ஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
- எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
- தேன் - 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பவுலில் சோள மா, தண்ணீர் சேர்த்து கலந்து பின் எலுமிச்சை சாறு , தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த பேஸ்டை கண்களைச் சுற்றியுள்ள பகுதியைத் தவிர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பின்னர் கழுவவும்.
இந்த பேஸ் பேக்கை வாரம் ஒருமுறை போட்டு வந்தால் சருமம் பொலிவாக மாறும்.
2. தேவையான பொருட்கள்
- சோள மாவு - 1 ஸ்பூன்
- தயிர் - 1 ஸ்பூன்
- சர்க்கரை - 1/2 ஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
பயன்படுத்தும் முறை
முதலில் சோள மாவை தயிருடன் கலந்து பின் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த கலவையை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்து 10 நிமிடங்களுக்குப் பிறகு, வெதுவெதுப்பான நீரில் முகத்தை நீரில் கழுவவும்.
வாரம் ஒரு முறை இந்த பயன்படுத்தி வந்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் புது பொலிவை பெறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |