லேசான கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கும் சிறுநீரக பாதிப்பு இருக்குமா? ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
லேசான கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கும் சிறுநீரக செயலிழப்பு ஆபத்து இருக்கிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், குறைவாக கொரனா தாக்கியவர்களுக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, SARS-CoV-2 நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு மற்றும் நாள்பட்ட நோய் வளர்ச்சியை அதிகரிக்கிறது மற்றும் இறுதி கட்ட சிறுநீரக நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆய்வு கூறுவது என்ன?
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் அடிப்படையில், அமெரிக்காவில் கோவிட் -19 இருந்தவர்களில் 5,10,000 பேருக்கு சிறுநீரகக் காயம் அல்லது நோய் இருக்கலாம் என்று நம்ப்ப்படுவதாக சொல்லப்படுகிறது
ஆய்வின் படி, தொற்று ஏற்படாத நோயாளிகளுடன் ஒப்பிடுகையில், வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஆனால் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அவசியமில்லாமல் இருந்தவர்களுக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் போன்ற பெரிய பாதகமான சிறுநீரக நிகழ்வால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 15% அதிக ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரனாவால் குறைந்த அளவில் பாதிக்கப்பட்டவர்களை விட அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது.
ஏற்கனவே, ஐசியூ, ஆக்சிஜன் என பெரிதாக பாதிக்கப்பட்டும் மீண்டு வந்து இரண்டாம் வாழ்வினை வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு சிறுநீரக செயல்பாடு மற்றவர்களை விட ஏழு மடங்கு பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அனைத்து செயல்பாடுகளும் பாதிப்பு அடைவதற்கான வாய்ப்பு எட்டு மடங்காக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே, கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த நிலையில் பாதிக்கப்பட்டு இருந்தாலும் சரி, எதாவது சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகளை கண்டறிந்தால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசித்து சிகிச்சையினை மேற்கொள்ள நல்லது.