தாயின் கருப்பையில் இருக்கும் போதே குழந்தையின் மூளையை தாக்கும் கொரோனா
2020ம் ஆண்டு முதல் உலக நாடுகளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது கொரோனா.
இதற்காக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டாலும், உருமாற்றம் அடைந்து அவ்வப்போது அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது.
எனினும் இதுகுறித்து பயப்பட வேண்டாம் என்றும், மாஸ்க் அணிதல், கைகளை சுத்தமாக வைத்துக்கெள்ளுதல் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க விஞ்ஞானிகள், கொரோனா கருப்பையில் உள்ள குழந்தையின் மூளையை தாக்குவதாக கண்டறிந்துள்ளனர்.
குழந்தையின் மூளையை தாக்கும் கொரோனா
தாயிற்கு கொரோனா தொற்று காணப்பட்டால் அது குழந்தையையும் பாதிக்கும், ஆனால் குழந்தை பிறந்தவுடன் சோதித்து பார்த்தால் கொரோனா தொற்று உறுதியாகாது. குழந்தை வளர வளர அதன் வளர்ச்சியில் தடை ஏற்படும்.
உறுதி செய்யப்பட்ட சோதனை!!
கொரோனா தாக்கத்தின் உச்சத்தின் போது கர்ப்பமாக இருந்த 2 பெண்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் 3 - 6 மாதம் கர்ப்பமுடையவர்கள். ஆனாலும் பிறந்த இரண்டு குழந்தைகளுக்குமே தொற்று உறுதி செய்யப்படவில்லை.
அதே போன்று பிறந்த இரண்டு குழந்தைகளுக்கும் பிறந்த அன்றே வலிப்பு வந்துள்ளது. அந்த இரண்டு குழந்தைகளும் முறையான வளர்ச்சி இல்லாமல் இருந்துள்ளனர்.
அதில் ஒரு குழந்தை 13 மாதங்களில் உயிரையும் பறிக்கொடுத்துள்ளது.
குழந்தையின் ரத்தத்தில் அதிகமான ஆன்டிபாடிகள் இருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆய்வாளர்கள் தெரிவிக்கும் கருத்து என்ன?
கொரோனா முதலில் தாயிடம் இருந்து நஞ்சுக்கொடிக்கு வந்துள்ளது.
அதன் பிறகு அது குழந்தைக்கு பரவியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த இரு குழந்தைகளின் தாய்களின் நஞ்சுக்கொடிகளிலும் வைரஸ் இருப்பதற்கான சான்றுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும் 13 மாதங்களில் உயிரிழந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனையில் கண்டறிந்த போது அக்குழந்தையின் மூளையில் வைரசின் தடயங்களையும், நேரடி தொற்று காயங்களையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
மேலும் குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்கள் அதன் முன்கூட்டியே தடுப்பூசி எடுத்து கொள்ளும் படியும் அறிவுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.