ஒரே வாரத்தில் 4 கோடி பேர்! அதிவேகமாக பரவும் புதியவகை கொரோனா வைரஸ்
சீனாவில் இம்மாத இறுதிக்குள் 4 கோடி பேர் ஒரே வாரத்தில் உருமாறிய கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவர் எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உருமாறிய கொரோனா வைரஸ்
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் பேரிழப்புகளை ஏற்படுத்தியது. எனினும் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.
சமீபத்தில் சீனாவில் பி.எப்.7 என்ற உருமாறிய கொரோனா வைரசால் பல லட்சம் பாதிக்கப்படுவதாக ஆய்வுத்தகவல்கள் வெளியாகின.
AP
இந்த நிலையில், புதியவகை கொரோனா வைரஸ் ஏப்ரல் மாதத்தில் இருந்து வேகமாக பரவி வருகிறது. இது இம்மாத இறுதிக்குள், ஒரே வாரத்தில் நான்கு கோடி பேரை தாக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதிர்ச்சி தகவல்
மேலும் சூன் மாதத்தில் உச்சம்தொட்டு ஒரே வாரத்தில் 6.5 கோடி பேரை தாக்கும் என்றும் மருத்துவர்கள் கணித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனை எதிர்கொள்ள புதிய தடுப்பூசியுடன் சீனா தற்போது தயாராகி வருவதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் தோன்றிய இடமாக சீனா கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
TIMESOFINDIA