சுவிட்சர்லாந்தில் ஒரே முதியோர் இல்லத்தில் 41 பேர்கள் பாதிப்பு
சுவிட்சர்லாந்தின் பாசல் மாநிலத்தில் ஒரே ஒரு முதியோர் இல்லத்தில் மட்டும் 41 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பாசல் மாநிலத்தின் Muttenz பகுதியில் அமைந்துள்ள குறித்த முதியோர் காப்பகத்தில் 27 குடியிருப்பாளர்களுக்கும் 14 ஊழியர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. தற்போது, இரண்டு வார காலத்திற்கு குறித்த இல்லம் மூடப்பட்டுள்ளதுடன், மிக விரைவில் அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இல்லத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டதன் காரணம் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது. சுகாதாரத்துறை முன்வைத்த அனைத்து கட்டுப்பாடுகளையும் குறித்த இல்லத்தில் கடைபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், தீவிர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.