பிரான்சில் புதிய உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு! இறப்பு எண்ணிக்கை 90,146-ஆக உயர்வு
பிரான்சில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
பிரான்சில் கடந்த 24 மணி நேர இடைவெளியில் 25,229 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,015,560 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் தொற்றுநோய் வெடித்ததில் இருந்து, பிரான்சில் மொத்தம் 90,146 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 228 இறந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை 109 குறைந்து 24,749 ஆக குறைந்துள்ளது.
ஆனால், Life Support தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை 41 அதிகரித்து 4,033 ஆக அதிகரித்துள்ளது.
இப்போது பிரான்சில் உள்ள அனைத்து புதிய பதிப்புகளில் 67 சதவீதத்திற்கும் அதிகமாக பிரித்தானியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் ஆக்கிரமித்திருப்பதாகவும், அதே நேரத்தில் பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவில் காணப்படும் புதிய விகாரங்கள் பிரான்சின் மொத்த பதிப்பில் 6 சதவிகிதம் வரை உள்ளதாகவும் சுகாதார அமைச்சர் Olivier Veran தெரிவித்துள்ளார்.
மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரித்துவருவதனால் முகக்கவசம் அணிவதையும் மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவை கடைபிடிப்பதையும் உறுதி செய்வதற்கும், நெரிசலான பொது இடங்களை வெளியேற்றுவதற்கும் 4,000-க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் தலைநகரில் நிறுத்தப்படுவார்கள் என்று பாரிஸ் பொலிஸ் மாகாணம் அறிவித்தது.
கடந்த ஆண்டு டிசம்பரின் பிற்பகுதியில் இருந்து, பிரான்ஸ் 4,569,849 முதல் டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. ஃபைசர் / பயோஎன்டெக், மாடர்னா மற்றும் அஸ்ட்ராஜெனெகாவுக்குப் பிறகு, நேற்று ஜான்சன் அண்ட் ஜான்சனின் ஒற்றை டோஸ் கோவிட் -19 தடுப்பூசியை 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் உட்பட அனைத்து பெரியவர்களுக்கும் வீட்டிலேயே பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.