லண்டனில் கொரோனா தொற்று 60 சதவீதம் குறைந்துள்ளது! எப்படி தெரியுமா? வெளியான ஆய்வறிக்கை
பிரித்தானியாவில் கொரோனா தடுப்பூசி பணி போட துவங்கியதில் இருந்து கொரோனா தொற்று மற்றும் அதன் நோய் தீவிரத்தன்மை குறைந்துள்ளதாக, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் வரிசையில் பிரித்தானியாவும் உள்ளது. இதனால் அவசர கால நடவடிக்கையாக, முதல் நாடாக கொரோனா தடுப்பூசிக்கு பிரித்தானியா அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து வயதானவர்கள், மருத்துவ பணியாளர்கள், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள் போன்றோர்கள் முதலில் தடுப்பூசி போடப்பட்டு, அதன் பின் அடுத்தடுத்த தரப்பினருக்கு போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பணி துவங்கியதில் இருந்து கொரோனா தொற்று மற்றும் நோய் தீவிரத்தன்னமை குறைந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
லண்டனில் இயங்கும் இம்பீரியல் கல்லூரியில் உள்ள ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வின் முடிவில், கொரோனா கட்டுப்பாடுகள் நோய் பரவும் தன்மையை குறைத்துள்ளது.
கொரோனாதடுப்பூசி பணி செலுத்துவதன் காரணமாக நோய் பரவல் மற்றும் நோயின் தீவிரம் , மருத்துவமனைகளில் இறப்பு விகிதம் ஆகியவை பெருமளவு குறைந்துள்ளது.
60 சதவீத நோய் தொற்று தடுப்பூசி காரணமாக குறைந்துள்ளது. 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி காரணமாக பயனடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
தடுப்பூசி நம்பிக்கை காரணமாகவும், கொரோனா பரவல் குறைந்து வருவதன் காரணமாகவும், பிரித்தானியாவில் அடுத்த வாரம் தளர்வுகள் தளர்த்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
