சுவிஸில் கொரோனா எப்போது உச்சம் அடையும்? அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல்
சுவிஸில் கொரோனா வைரஸ் தொற்று எப்போது உச்சம் அடையும் என்பது குறித்து அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தேசிய கொரோனா அறிவியல் பணிக்குழுவின் தலைவர் Tanja Stadler கூறியதாவது, ஜனவரியில் நோய்த்தொற்றுகள் உச்சத்தை எட்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
மக்களிடையே இருக்கும் தொடர்புகள் இதே அளவில் இருந்தால் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தொற்று உச்சத்தை அடையலாம்.
மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருந்தால், தொற்று உச்சம் அடைய அதிக நேரம் எடுக்கும்.
உச்சம் அடையும் வாரத்தில் 300 புதிய நோயாளிகள் வரை தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படுவார்கள் என Tanja Stadler தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நோயாளிகளின் கூடுதல் வருகையை சமாளிக்க மருத்துவமனைகள் தயாராக வேண்டும் என தொற்று நோய் கட்டுப்பாட்டுக்கு பொறுப்பான சுகாதார அதிகாரி Virginie Masserey தெரிவித்துள்ளார்.
மேலும், உச்சநிலையில், தனிமைப்படுத்தல் அல்லது தனிமைப்படுத்தப்பட்டதன் காரணமாக, மக்களில் 10-15% பேர் வேலைக்குச் செல்ல முடியாமல் போகலாம் என குறிப்பிட்டுள்ளார்.