இந்தியாவில் 1200 ஐ தாண்டிய கொரோனா ஜே.என். 1 தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக குறைந்து வருகின்றன.
கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 840 ஆக இருந்தது.
நேற்றைய நிலவரப்படி 269 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதன் மூலம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 556 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது கடந்த டிசம்பர் மாதத்தில் 100 இற்கு கீழ் குறைந்துள்ளது.
ஆனாலும் கடந்த சில நாட்களில் இந்த எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 800 இல் இருந்து 4 ஆயிரத்து 500 ஆக அதிகரித்தது.
மேலும் "17 மாநிலங்களில் ஜே.என். 1 வகை தொற்று மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1200-ஐ கடந்துவிட்ட போதிலும், இதுகுறித்து அதிகம் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை" என சுகாதார துறை தெரிவித்துள்ளது.
புதிய வகை தொற்று மூலம் பாதிக்கப்பட்ட பத்து பேர்களில் 1.1 சதவீதம் பேர் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |