கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீளும் ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா? அதிர்ச்சி தகவல்

Covid Men CoronaVirus
By Kaviarasan Jun 18, 2021 08:43 PM GMT
Report
Courtesy: MalaiMalar

கொரோனா வைரஸ் ஆண்களின் விந்தணு செயல்பாட்டை சேதப்படுத்தும், விந்தணுக்களின் எண்ணிக்கை அளவு, மற்றும் இயக்கம் ஆகியவற்றில் 50 சதவீதம் வரை பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

கொரோனா இப்படி எல்லாமா தாக்கும்...? என்று அடிக்கடி வெளிவரும் தகவல்கள் அதிர வைக்கின்றன. கொரோனா தாக்கியவர்களை அதில் இருந்து மீட்பதற்காக மருத்துவத்துறை போராடுகிறது. பல்வேறு சிகிச்சை முறைகளை கையாண்டு கொரோனாவை அழித்து மக்களை காப்பாற்றினாலும் உடலுக்குள் அது முடிந்தவரை பல உறுப்புகளை சிதைத்து சின்னா பின்னமாக்கி விடுகிறது.

எனவே கொரோனாவில் இருந்து மீண்டாலும் அதன் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதே பெரும் சவாலாக ஆகிவிட்டது. கொரோனாவில் இருந்து மீண்டாலும் உடலில் எங்கு வேண்டுமானாலும் ரத்தம் உறைதலை ஏற்படுத்தலாம். இதனால் உடலில் கை, கால் போன்ற உறுப்புகளை இழக்கவும் நேரிடலாம். இதயம் நின்றுபோகலாம்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீளும் ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா? அதிர்ச்சி தகவல் | Corona Man Covid After Side Effects

எனவே தொடர் மருத்துவ கண்காணிப்பு அவசியம் என்கிறார்கள். அதன்பிறகு கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை வகையறாக்கள் தொற்றிக்கொள்ளும். அதுவும் கண்களை சேதப்படுத்தும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும் என்று கண்டறிந்தனர்.

இப்போது அதற்கான மருந்துகளை கண்டுபிடித்து சிகிச்சை அளித்து போராடுகிறார்கள். இப்போது வெளிவந்துள்ள சில தரவுகளின் அடிப்படையில் கொரோனா ஆண்மை குறைபாட்டை ஏற்படுத்துவதும் தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் ஆண்களின் விந்தணு செயல்பாட்டை சேதப்படுத்தும், விந்தணுக்களின் எண்ணிக்கை அளவு, மற்றும் இயக்கம் ஆகியவற்றில் 50 சதவீதம் வரை பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

விந்தணுக்களின் உற்பத்தி அல்லது பாலியல் ஹார்மோன்களின் உருவாக்கத்தை பாதிக்கும். இது வெறும் கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்தது என்றும் கூறிவிட முடியாது.

கொரோனா பாதிப்பால் ஏற்படும் மனச்சோர்வு, மன அழுத்தங்களும் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளாரகள். நோய் தொற்றின் தீவிரம் விந்தணுக்களின் தாக்கம் மிதமாகவோ அல்லது தீவிரமாகவோ இருந்தால் தற்காலிக ஆண்மைக்குறைவுக்கு வழி வகுக்கும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீளும் ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா? அதிர்ச்சி தகவல் | Corona Man Covid After Side Effects 

நிரந்தரமான சேதம் ஏற்படுமா? என்பது பற்றி தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். பொதுவாக வைரஸ் காய்ச்சல்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம். ஆனால் ஆரோக்கியமானதும் சில வாரங்களில் எண்ணிக்கை பெருகி விடும்.

ஆனால் கொரோனாவால் இழந்த ஆண்மையை மீட்க எவ்வளவு காலமாகும் என்பதை உறுதிப்படுத்தவில்லை. கொரோனாவில் இருந்து மீண்ட ஆண்களில் 10 முதல் 20 சதவீதம் ஆண்கள் விதைப்பை வலியை அனுபவிக்கிறார்கள். விதைப்பையில் வலி, வீக்கம், கட்டிகள் போன்ற நோய்களையும் ஏற்படுத்துகிறது. எனவே கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US