பிரான்சில் அதிகரிக்கும் கொரோனா... 5433 பேர் ஆபத்தான நிலையில்! நிரம்பி வழியும் மருத்துவமனைகள்
பிரான்சில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகள் தொடர்ந்து பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனா பரவல் என்பது தீவிரமாகி வருகிறதே தவிர, குறைந்தபாடில்லை.
இந்நிலையில், நாட்டில் ஏற்படும் தொடர்ச்சியான கொரோனா தொற்று அதிகரிப்பால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும், நோயாளிகளின் எண்ணிக்கைகளும் மிகவும் மோசமாக அதிகரித்து வருகிறது.
இன்று காலை நிலைமையில் 30,000 கொரோனாத் தொற்று நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் உயிருக்கு ஆபத்தானநிலையில் 5433 பேர் தீவிரசிசிக்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்திற்குள் 284 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாத இறுதிக்குள் முதற்கட்டத் தொற்றலையில் இருந்த 7,000 தீவிரசிக்சை நோயாளிகள் என்ற எண்ணிக்கையைத் தாண்டும் ஆபத்து உள்ளதாக சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார்.
ஆனால் தொடர்ந்தும் அனைவரும் வெளியில் திரிவதற்கு பிரதமர் இம்மானுவேல் மேக்ரான் அனுமதித்து வருவது மருத்துவத் துறையினரிற்குப் பெரும் கவலையயை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.