சுவிட்சர்லாந்தில் கொரோனா நோயாளி ஒருவருக்கு செலவாகும் தொகை: வெளியான தகவல்
சுவிட்சர்லாந்தில் தீவிர சிகிச்சை பெறும் ஒரு கொரோனா நோயாளிக்கு 100,000 பிராங்குகள் வரையில் செலவாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் மருத்துவமனைகளில் சேர்ப்பிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கும் இரட்டிப்பாவதாக தெரியவந்துள்ளது.
இதனால் அடுத்த சில வாரங்களில் தீவிர சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்களே தீவிரமாக கொரோனா தொற்றுக்கு இலக்காவதாகவும் தெரியவந்துள்ளது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளவர்களில் 10% மக்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளவர் என்றே கூறப்படுகிறது.
மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு 25,000 முதல் 30,000 பிராங்குகள் வரையில் செலவாவதாக தெரியவந்துள்ளது.
மட்டுமின்றி நீண்ட நாட்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளி ஒருவருக்கு 100,000 பிராங்குகள் வரையில் செலவாகும் என்றே கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி, ஒரு கொரோனா நோயாளி 15 முதல் 20 வகையான மருந்துகளும் உட்கொள்ள வேண்டும் என்றே மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.