பிரான்சில் இந்த மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்படும் கொரோனா நோயாளிகள்! வெளியான தகவல்
பிரான்சின், இல் து பிரான்சுக்குள் இருந்து கொரோனா நோயாளிகள் வெளியேற்றப்படு வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸும் தீவிரமாக பரவி வருகிறது.
குறிப்பாக இல் து பிரான்சில் கொரோனாவின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக அங்கிருக்கும் மருத்துவமனையின் அவசரசிகிச்சை பிரிவு நிரம்பி வழிகின்றன.
வரும் வாரத்தில், இதன் பரவல் தீவிரமாக இருக்கும் என்பதாலும், நோயாளிளின் அத்தியாவசியம் தேவைப்பட்டாலும், அவர்கள் வெளிமாகாணங்களுக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்று பிரதமர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலை முதல் கொரோனா நோயாளிகள் வெளி மாகாணங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மேலும், வரும் நாட்களில் மேலும் பெரும் தொகையான நோயாளிகள் இல் து பிரான்சுக்குள் இருந்து வெளியேற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.