கொரோனா கட்டுப்பாடுகளை மொத்தமாகவே விலக்கிக்கொள்ளலாம்: சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள பாஸிட்டிவ் அறிவிப்பு
வரும் கோடையில் கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்ளமுடியும் என சுவிஸ் அதிகாரிகள் கருதுகிறார்கள்.
ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாகவே முடிவுக்கு கொண்டுவந்துவிடலாம் என அவர்கள் நம்புகிறார்கள்.
அதை எப்படி செய்வது என்பது குறித்து அவர்கள் விவரம் வெளியிட்டுள்ளார்கள். கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்வது முற்றிலும் தடுப்பபூசி திட்டத்தின் அடிப்படையில்தான்... அதை அடைய முடியும், கொரோனாவை கட்டுப்படுத்தமுடியும் என அதிகாரிகள் நம்புகிறார்கள்.
சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சரான Alain Berset, பைசர் மற்றும் மொடெர்னா நிறுவனங்களிலிருந்து கொரோனா தடுப்பூசி ஆர்டர் செய்துள்ளதாகவும், அவை இப்போதிலிருந்து ஜூலை இறுதி வரை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இன்றைய திகதிக்கு சுவிட்சர்லாந்தில் வாழ்வோரில் அரை மில்லியன் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் பெற்றுக்கொண்டுவிட்டார்கள். ஏற்கனவே கைவசம் தடுப்பூ மருந்து ஸ்டாக் இருப்பதால் மற்றவர்களுக்கு தடுப்பூசி போடுவதிலும் எந்த பிரச்சினையும் இல்லை.
அப்படியானால், வயது வந்தவர்களில் 75 சதவிகிதத்தினருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுவிடும். எளிதில் பாதிப்புக்குள்ளாகும் நிலையிலிருப்போர் அனைவருக்கும், ஏப்ரல் 20 வாக்கில் தடுப்பூசி வழங்கப்பட்டுவிடும்.
மற்றவர்களில் பெரும்பான்மையோர் ஜூன் மாத இறுதிக்குள் தங்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுவிடுவார்கள்.
ஆக, கோடையின்போது கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்கிறார் Berset.
அதே நேரத்தில், அதிகாரிகள் அதிகம் எதிர்பார்க்கிறார்களோ என்ற சந்தேகம் சிலருக்கு இருப்பதையும் மறுக்க இயலவில்லை.