சுவிஸ் பனிச்சறுக்கு ரிசார்ட்டில் கொரோனா விதி மீறல்கள்: வெளியே சொன்னவருக்கு நேர்ந்த கதி!
சுவிஸ் பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்றில் விதி மீறல்கள் நடப்பதை வெளியே சொன்ன ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் Bergün என்ற கிராமத்திலுள்ள பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்றில் லிப்ட் ஆபரேட்டராக வேலை செய்பவர் Marco Eberhard.
பனிச்சறுக்கு ரிசார்ட்டுகளுக்கு வருபவர்கள் கொரோனா என்ற ஒன்று இல்லாததுபோலவே நடந்துகொள்வதாக கூறியுள்ளார் அவர்.
கேபிள் கார்களில் பயணிக்க வருபவர்கள், வரிசையில் நிற்கும்போது நெருக்கமாக நிற்பதாகவும், மூன்றில் ஒருவர் மாஸ்க் அணிவதில்லை என்றும் கூறியிருந்தார் Marco.
நடப்பதைப் பார்த்தால் மனிதத்தன்மை மீதே எனக்கு சந்தேகம் வருகிறது என்று கூறிய Marco, பனிச்சறுக்கு ரிசார்ட்டுகள் மூடப்படவேண்டும் என்றும் கூறியிருந்தார். ஆனால், அவர் தன் முதலாளிக்கு உண்மையாக இல்லை என்று கூறி அவரை பணிநீக்கம் செய்துள்ளது அந்த ரிசார்ட்.
மக்கள் விதிகளை மதிக்காததால் Bergün கிராமம் மட்டுமல்ல, மொத்த ஐரோப்பாவும் கொரோனா பாதிப்புக்குள்ளாகும், காரணம், இங்கு பிரித்தானியா, ரஷ்யா, இத்தாலி என பல ஐரோப்பிய நாட்டவர்கள் இந்த இடத்தில் ஒன்று கூடுகிறார்கள் என்கிறார் Marco.
பாவம், மனிதர்கள் மீதான அக்கறையில் நல்லதைச் சொன்னவர், இப்போது வேலையை இழந்து நிற்கிறார்!